வடலுார்: வள்ளலார் குருகுலம் பள்ளியில், பள்ளி திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.வடலூர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.வடலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமையில், வள்ளலார் குருகுலம் மேல்நிலை பள்ளி, தாளாளர் செல்வராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் முன்னிலையில், குறிஞ்சிப்பாடி ஆசிரியர் பயிற்றுனர் தேவி, குருகுலம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பூர்ணிமாதேவி, உலகநாதன், ரெங்கநாதன், உதவி தலைமை ஆசிரியர்கள் குருபிரசாத், நவமணி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துக்கள் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளான அரசு வழிகாட்டுதலின்படி, உடல் வெப்பம் பரிசோதனை, கிருமிநாசினி, சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றுடன் சிறப்பாக நடந்தது.ஆசிரியர் பழனிவேல் நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE