சிவகங்கை : சிவகங்கையில் அனைத்து தலைமை, துணை தலைமை தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை ஜன.15 வரை நடக்கிறது என கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:ஒருவர் ஒரு கிராம் முதல் அதிக பட்சம் 4 கிலோ வரை பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் ரூ.5104 என நிர்ணயம் செய்துள்ளோம். தங்க பத்திர முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி, 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும்.மேலும், 8 ஆண்டுகளுக்கு பின் அன்றைய24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விபரத்தை 97896 09988 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE