பெண்ணாடம்: பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் கிளாடியல் ஜெனிபர் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், விஜயரங்கன், மதனகோபால், நெல்சன், பிரபாகரன், தமிழ்வாணன், விக்னேஷ், மருந்தாளுனர் முருகன், சமுதாய நல கிராம செவிலியர் மார்கரேட் மற்றும் செவிலியர்கள், எக்ஸ்ரே பிரிவு சையது பாருக், லேப் டெக்னீஷியன் ராஜேஷ், உதவியாளர்கள் பங்கேற்றனர்.
முகாமில், நல்லுார் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன், கொரோனா பரிசோதனையின் போது, கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடுபவர்களை தனித்தனியாக அமர வைப்பது. அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து மருத்துவ பணியாளர்களுக்கு நலக்கல்வி வழங்கினார்.தொடர்ந்து, கை கழுவும் முறை, சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE