கடலுார்: கடலுார் மாவட்டத்தில், பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு நடந்தது.கடலுார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.அதையொட்டி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமையில், நேர்முகத்தேர்வு நடந்தது. இதில், 128 பேர் கலந்து கொண்டனர்.அரசு எலும்பு முறிவு டாக்டர் விஜயஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE