விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாவட்ட அளவிலான முந்திரி சாகுபடியாளர்கள் கருத்தரங்கு நடந்தது.நிகழ்ச்சிக்கு, மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைமணி முந்திரியில் மகசூல் பெருக்கம் குறித்து விளக்கினார்.முன்னோடி விவசாயி நாராயணசாமி, உதவி பேராசிரியர் சுந்தரய்யா ஆகியோர் முந்திரி மகசூல் இரட்டிப்பாக மாற்றுதல், முந்திரி ரகங்கள், அடர்நடவு முறை, தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர்.உதவி பேராசிரியர்கள் பாஸ்கரன், ஜெயபிரபாவதி, மருதாச்சலம் ஆகியோர் நீர் மேலாண்மை, சொட்டுநீர் பாசனம், நீர் உரப்பாசன தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சியளித்தனர்.மாவட்டத்தைச் சேர்ந்த முந்திரி சாகுபடியாளர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, முந்திரி சாகுபடி குறித்த கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE