திருப்பூர்: காலேஜ் ரோடு, அணைப்பாளையத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மழைநீர் சேகரிப்பு குட்டை ஒன்று உள்ளது. குட்டையின் பாதி பகுதியை முட்புதர்கள் மண்டி ஆக்கிரமித்து உள்ளது. மழை நீருடன் கழிவு நீர் தேங்கி, அதில், பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதின் பை ஆக்கிரமித்து உள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி வழியேசெல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, குட்டையை துார்வாரி பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.நீர் வழித்தடத்தில் புதர் ஆக்கிரமிப்புவெள்ளகோவில்: முத்தூர் அருகே மழை நீருடன், வயல் வடிகால் தண்ணீர் கலந்து, மேட்டாங்காடு வலசு குழலிபாளையம், வேலம்பாளையம், பழனி கவுண்டன் வலசு, நாவிதன் கரை வழியாக வெள்ளகோவில் ரோடு, ஆலாம்பாளையம், கொடுமுடி ரோடு வழியாக சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. தற்போது, மழை பெய்து வருவதால், இந்த ஓடையில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. எனவே, நாவிதன் கரை உள்ள பகுதியில் உள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி நீர் வழித்தடத்தை சரி செய்ய வேண்டும்.
கற்குவியலால் பயணிகள் அவதி
வெள்ளகோவில்: முததுார் பஸ் ஸ்டாண்ட் பகுதி மற்றும் பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள தார்சாலை உயரப்படுத்தியதால், கடைகள் இருக்கும் பகுதி பள்ளமானது. மழையால், பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ள வணிக வளாக கடைகளில் அடிக்கடி மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதற்காக, கடைகள் உள்ள பகுதியை உயர்த்த மண் மற்றும் கற்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது, மராமத்து பணி நிறைவுற்ற நிலையில் மண் மற்றும் கற்கள் கிடப்பதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
உபரி மண் கடத்தல் 'ஜரூர்' மண்அவிநாசி: அவிநாசி பேரூராட்சி பகுதியில், ரோட்டோரம் குழாய் பதிக்கும் பணிக்காக, குழி தோண்டப்பட்டு, பதித்து முடித்தபின், மீண்டும் நிரப்பப்படுகிறது. அவ்வாறு நிரப்பப்படும் போது, உபரி மண் வெளியேறுவது வழக்கம். இரவு நேரத்தில், மண்ணை சிலர் எடுத்து செல்கின்றனர். தாசில்தார் ஜெகநாதன் கூறுகையில், ''மண் எடுத்து செல்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியேறும் உபரி மண்ணை, ஒப்பந்ததாரர் தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE