13ம் தேதி போகி பண்டிகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

13ம் தேதி போகி பண்டிகை

Added : ஜன 09, 2021
Share
வரும், 13ம் தேதி போகி பண்டிகை... வீட்டில் வேண்டாத குப்பைகளை எரிப்பது மட்டுமல்ல, 'காப்பு கட்டு' சடங்கும் முக்கியமாக நடக்கும். இன்று ஆன்ட்ராய்டில் புகுந்து விளையாடும் குழந்தைகளுக்கு தெரியாமல் இருக்கலாம். இது வெறும் சடங்கல்ல. ஆதி தமிழனின் மருத்துவ அறிவு.அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்வது நம் கடமை. பெரிதாக மெனக்கெட வேண்டாம். காப்பு கட்டும் போது, எதற்காக கட்டுகிறோம்

வரும், 13ம் தேதி போகி பண்டிகை... வீட்டில் வேண்டாத குப்பைகளை எரிப்பது மட்டுமல்ல, 'காப்பு கட்டு' சடங்கும் முக்கியமாக நடக்கும். இன்று ஆன்ட்ராய்டில் புகுந்து விளையாடும் குழந்தைகளுக்கு தெரியாமல் இருக்கலாம். இது வெறும் சடங்கல்ல. ஆதி தமிழனின் மருத்துவ அறிவு.அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்வது நம் கடமை. பெரிதாக மெனக்கெட வேண்டாம். காப்பு கட்டும் போது, எதற்காக கட்டுகிறோம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் போதும்' என்கிறார் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி.அவரிடம் தொடர்ந்து பேசுகையில்...மார்கழி கடைசி நாள் போகி. வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள் மாவிலை தோரணத்துடன் தை மகளை வரவேற்பது நம் மரபு. படிப்பறிவில்லாத அந்த காலத்தில் அறிவியலை இதுபோன்ற சடங்குகள் மூலம்தான், நம் முன்னோர் புரிய வைத்தனர்.காப்பு கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய, 'முதலுதவி பெட்டி'. விஷக்கடி, ஒவ்வாமை, வயிற்றப்போக்கு போன்ற சிறுசிறு பிரச்னைகளுக்கு தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை அதில் அடங்கியிருக்கும்.பிரண்டை, தும்பை இப்போது பெரிதும் பயன்படுத்துவதில்லை. உடல் சூட்டை தடுக்க அற்புதமான மூலிகை ஆவாரை. இப்போது காசு கொடுத்தால்தான் கிடைக்கிறது. இன்றும் தாராபுரம், வெள்ளக்கோவில், காங்கயம் பகுதியில் பூத்துக்கிடப்பதால், மக்களே பறித்து பயன்படுத்துகின்றனர். தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன், அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்தால் அவ்வளவு புத்துணர்ச்சி.சிறுநீர் கல்லை உடைக்கும் சக்தி பீளைப்பூவுக்கு உண்டு. வேப்பிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மிகச்சிறந்த கிருமிநாசினி. இந்த அடிப்படையிலேதான் காப்பு கட்டை, சடங்காக்கி ஆரோக்கியத்தை பேணிக்காத்தனர் நம் முன்னோர்கள் என்பதை, சுட்டீஸ்களுக்கும் சொல்லி கொடுங்களேன்...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X