பல்லடம்:ஆயத்த ஆடை தயாரிக்க விசைத்தறியாளர்கள் ஆயத்தமாக வேண்டும் என, பல்லடத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், விசைத்தறி சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் நடந்தது. அதன் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். பொருளாளர் முத்துக்குமாரசாமி, நிர்வாகிகள் சக்திவேல், பரமசிவம், பாலாஜி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் பேசியதாவது:வாழ்வாதாரத்தை காக்க கூலி உயர்வு கேட்டு போராடி வருகிறோம். ஆனால், இன்றைய சூழலில் பணம் உள்ளவர்களின் கைக்கு தொழில் மாறி வருகிறது. ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.காலங்காலமாக கூலி உயர்வுக்கு போராடாமல், ஆயத்த ஆடை தயாரிக்க விசைத்தறியாளர்கள் ஆயத்தமாக வேண்டும். விசைத்தறி தொழில் மேன்மை பெற உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் கூட்டமைப்பு ஒன்றி ணைந்து செயல்படும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி பேசுகையில், ''பட்ஜெட் கூட்டத்துக்கு முன், விசைத்தறியாளர்களிடம் கருத்து கேட்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். ஜவுளி சந்தை மூலம் விசைத்தறியாளர்கள் சொந்த உற்பத்தியாளராக மாற முடியும். கூலி உயர்வு பிரச்னை தேர்தல் வாக்குறுதியாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் செயலாளர் பாலசுப்ரமணியன், மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறி சங்க நிர்வாகிகள் செல்வகுமார், பத்மநாபன், கந்தசாமி, செந்தில்குமார், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE