கடலுார்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2021-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கம் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார்.கலெக்டர் சந்திரசேகரசகாமுரி முன்னிலை வகித்தார். வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.வரும் 20ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. பட்டியல் வெளியிட்ட பின்னரும் வாக்காளர்கள்; இணைய வழியாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்து, பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை சார்ந்த வாக்குச் சாவடி முகவர்களும் தங்கள் பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு விடுபட்ட வாக்காளர்களின் விவரத்தினை தெரிவிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அருண் சத்தியா, சார் ஆட்சியர் மதுபாலன், ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன், தாசில்தார் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE