கடலூர்: மாற்றுத்திறனாளி ரேஷன்கடை பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து, நாளை மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு டி.வேலூர் கிராம ரேஷன் கடையில், அரசியல் கட்சியினர் பொங்கல் பொருட்களை தருவோம் என்று கூறி தகராறு செய்துள்ளனர்.அப்போது ஏற்பட்ட பிரச்னையில், ஒன்றிய கவுன்சிலர் ஒருவர், மாற்றுத்திறனாளியான ரேஷன் கடை பணியாளர் சுரேஷ் என்பவரை தாக்கியுள்ளார். அரசியல் கட்சியினர் நிர்வாகத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, ரேஷன் பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்குவது அநாகரீகமான செயல், இதை அரசு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.எனவே, ரேஷன் கடை பணியாளரை தாக்கியவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு, நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் தவறு செய்வதை முதல்வர் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது துணைத் தலைவர் சரவணன்உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE