சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் இருந்து குதித்தது

Added : ஜன 09, 2021
Share
Advertisement
வான்வெளி சாகசத்தில் உலக சாதனை படைக்க துடிக்கும் லட்சியத்திற்கு உரியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் 44. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் வான் சாகச வீரர். அதில் இவரின் திறமையை கவுரவித்து 2016ல் அர்ஜூனா விருதுக்கு நிகரான டென்சிங் நார்கே விருது பெற்றார். இதுவரை விமானம், ெஹலிகாப்டரில் இருந்து 12,000 முறை குதித்து முத்திரை பதித்துள்ளார்.கடற்படையில் ஓய்வு பெற்ற

வான்வெளி சாகசத்தில் உலக சாதனை படைக்க துடிக்கும் லட்சியத்திற்கு உரியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் 44.

இவர் இந்தியாவின் நம்பர் ஒன் வான் சாகச வீரர். அதில் இவரின் திறமையை கவுரவித்து 2016ல் அர்ஜூனா விருதுக்கு நிகரான டென்சிங் நார்கே விருது பெற்றார். இதுவரை விமானம், ெஹலிகாப்டரில் இருந்து 12,000 முறை குதித்து முத்திரை பதித்துள்ளார்.கடற்படையில் ஓய்வு பெற்ற பின்னும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் தன் சொந்த பணத்தில் அமெரிக்கா சென்று ஆறுமாத பயிற்சி பெற்றார்.

2015ல் சிகாகோவில் வான் சாகச உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்க இவருக்கு ஸ்பான்சர் கிடைக்கவில்லை. மனம் தளராமல் இப்போட்டியில் சொந்த செலவில் பங்கேற்றார். இதில் இந்திய பாதுகாப்பு படை (டிபன்ஸ் அணியினர்) 6 பேர் பங்கேற்றனர். இவர்கள் தகுதிச்சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. 'அக்யூரசி' போட்டியில் (5000 அடியில் குதித்து தரையில் வட்டமான டிஸ்க்கில் கால் வைக்க வேண்டும்) 37 நாடுகளில் இருந்து 180 வீரர்கள் பங்கேற்றனர். ராஜ்குமார் 16வது இடத்தில் தேர்வானார்.மறக்க முடியாத அனுபவம்உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அவரது நாட்டு கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்க வேண்டும்.

இந்தியாவில் ராஜ்குமார் மட்டுமே தகுதி பெற்றார். அவர் தனி ஒருவராய் இந்திய கொடியை உயர்த்தி பிடித்து கம்பீரமாக நடந்து வந்ததும் இந்தியாவின் ஒரே வீரர் என்ற அறிவிப்பில் பாராட்டு குவிந்தது.ராஜ்குமார் கூறுகையில், ''இந்தியாவில் வான்சாகச பயிற்சி விழிப்புணர்வு இல்லை. இப்போது சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவிலேயே 'ஸ்கை டைவிங்' லைசென்ஸ் வழங்கும் அதிகாரம் நான் மட்டுமே பெற்றுள்ளேன். 2021 ஏப்ரலில் சர்வதேச போட்டி நடக்க உள்ளது.

இதற்காக கலிபோர்னியாவில் 36 நாடுகளின் 66 வீரர்கள் 15,000 அடி உயரத்தில் குதித்து 13,000 அடியில் வட்டத்தை உருவாக்கினோம். இதில் தகுதி பெற்றுள்ளேன். சர்வதேச போட்டியில் சாதிக்க வேண்டும். தமிழகத்தில் வான்சாகச பயிற்சி பள்ளி நிறுவுவதே என் லட்சியம், என்றார். இவரை பாராட்ட rajkumarskydive@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X