நம்ம ஊரு பொங்கல் விழா; காயத்ரி ரகுராம் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நம்ம ஊரு பொங்கல் விழா; காயத்ரி ரகுராம் பங்கேற்பு

Added : ஜன 09, 2021
Share
கடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் நடந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில், கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது.மாவட்டத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை
 நம்ம ஊரு பொங்கல் விழா; காயத்ரி ரகுராம் பங்கேற்பு

கடலுார்: கடலுாரில் பா.ஜ., சார்பில் நடந்த நம்ம ஊரு பொங்கல் விழாவில், கலை கலாசார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார்.பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்டம் சார்பில், சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் 'நம்ம ஊரு பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது.மாவட்டத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில கலை கலாசாரப் பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.மாவட்ட மகளிர் அணித் தலைவி லலிதா பரணி மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் ராதா துரைராமலிங்கம் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நகர தலைவர் வேலு வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X