கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ஆடுகளை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் நிதி உதவி வழங்கினார்.சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தில் பெய்த கன மழையில் கருத்தாப்பிள்ளை, பழனி, அஞ்சலை ஆகியோருக்கு சொந்தமான ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்தன.இதனையொட்டி, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ராஜசேகர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் கூறினார்.அப்போது, கால்நடை துறை உதவி இயக்குனர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் திருமலை, வி.ஏ.ஓ., தீபா, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் அருணாசலம், கிளை செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் பிரகாஷ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE