பொது செய்தி

தமிழ்நாடு

சேந்தமங்கலம் கோவிலில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு

Added : ஜன 09, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலத்தில் கி.பி., 13-ஆம் நுாற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் மன்னன் சிவனை வழிபடுவதற்காக ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் என்ற கோவிலை கட்டினார்.பல ஆண்டுகளாக இக்கோவில் பராமரிக்கப்படாமல் இருந்ததால்

உளுந்துார்பேட்டை: சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் விழுப்புரம் எம்.பி., ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை தாலுகா சேந்தமங்கலத்தில் கி.பி., 13-ஆம் நுாற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் மன்னன் சிவனை வழிபடுவதற்காக ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ வானிலை கண்டீஸ்வரர் என்ற கோவிலை கட்டினார்.பல ஆண்டுகளாக இக்கோவில் பராமரிக்கப்படாமல் இருந்ததால் சிதிலமடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக நிதி ஒதுக்கீடு செய்து தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் இக்கோவிலை விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் பார்வையிட்டார். அப்போது அவர், கோவில் திருப்பணிகள் விரைந்து நடக்கவும், அதற்கு தேவையான நிதியுதவிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X