சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் கவிழ்ந்து விபத்து டிரைவர் பரிதாப பலி

Added : ஜன 09, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே சாலையோர மரத்தில் மோதி டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரை சேர்ந்தவர் ராயர் மகன் கோகுல்,26; டிரைவர். இவர் டிஎன் 31 பிடபள்யூ3024 பதிவெண் கொண்ட டிராக்டர், டிஎண்25 ஜெ0904 பதிவெண் கொண்ட டிப்பரில் திருக்கோவிலுாரில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே சாலையோர மரத்தில் மோதி டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரை சேர்ந்தவர் ராயர் மகன் கோகுல்,26; டிரைவர். இவர் டிஎன் 31 பிடபள்யூ3024 பதிவெண் கொண்ட டிராக்டர், டிஎண்25 ஜெ0904 பதிவெண் கொண்ட டிப்பரில் திருக்கோவிலுாரில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் புதுவெங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதி, அருகில் உள்ள ஓடையில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X