ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., குழந்தைவேலு, ஊராட்சி செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, கீழ்பாடி கிராமத்திற்கென சபரிராஜன் என்ற காவல் அலுவலர் நியமிக்கப்பட்டு, ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.தொடர்ந்து கிராமத்திறகு என வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டது. கிராம இளைஞர்கள், பொதுமக்கள் தங்களது ஊர் சார்ந்த தகவல்கள், பிரச்னைகள், சட்டவிரோத செயல்களை குரூப்பில்பதிவிடலாம் எனவும், இதன் மூலம் மக்களின் பிரச்னைகள் சரி செய்யப்படும். குற்றங்கள் தடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் போலீசார்கள் குமார், கோபிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE