திருப்பூர்:குடும்ப பிரச்னை காரணமாக துாக்குமாட்டி தற்கொலை செய்யும் வீடியோவை 'வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்' வைத்து விட்டு தொழிலாளி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், சாமுண்டிபுரம், இ.பி., காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன், 27. சுமை துாக்கும் தொழிலாளி. இவரின் மனைவி சித்ரா, 23. கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். ஐந்து வயதில், ரித்திக் என்ற மகன் உள்ளார்.தம்பதியருக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்த சித்ரா, அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பாண்டியராஜன் பலமுறை வற்புறுத்தியும், சித்ரா வர மறுத்து விட்டார்.இதனால், மனமுடைந்த அவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி, வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். தற்கொலைக்கு முன், மொபைல் போனில் வீடியோ எடுத்து, 'வாட்ஸ் அப்' ஸ்டேட்டஸ் வைத்தார். இதனை பார்த்த அவரின் நண்பர்கள், அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர்.கதவை உடைத்து உள்ளே சென்ற போது, பாண்டியராஜன் துாக்கில் தொங்கி இறந்து கிடந்தது தெரிந்தது. தற்கொலைக்கு காரணம், குடும்ப பிரச்னையா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா, என வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE