பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்தே நிமிடங்களில் அழகோவியம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
'எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக பின் தொடராதே, உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு' என்ற கூற்றுக்கேற்ப தனக்கென ஓவியப் பாதையை உருவாக்கி அசத்தி வருகிறார் திண்டுக்கல் பொறியியல் மாணவன் குணாகரன்.திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் குணாகரன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினிரியரிங் படிக்கிறார். கொரோனா காலத்தில் இரவு

'எல்லோரும் பயணிக்கிறார்கள் என்பதற்காக பின் தொடராதே, உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு' என்ற கூற்றுக்கேற்ப தனக்கென ஓவியப் பாதையை உருவாக்கி அசத்தி வருகிறார் திண்டுக்கல் பொறியியல் மாணவன் குணாகரன்.திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் குணாகரன்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினிரியரிங் படிக்கிறார். கொரோனா காலத்தில் இரவு நேரம் விளக்கொளியில் சக நண்பர்களின் ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கிறார் குணாகரன். கல்லூரி இல்லையென்பதால், இணையத்தில் விளையாட்டுகளில் முடங்கும் மாணவர்கள் மத்தியில், இவர் மட்டும் இணையத்தை முறையாக பயன்படுத்தி திறமையை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.'யூ டியூப்'பில் ஓவியங்கள் வரைவது குறித்த வீடியோக்களை பார்த்து, பார்த்து பென்சிலால் வரைய தொடங்கி இன்று தன் வீட்டையே ஓவிய அறையாக மாற்றிவிட்டார்.

இவருக்கு எவரும் கற்றுக் கொடுக்கவில்லை. திருத்தங்களை சரிசெய்து அறிவுரை கூற ஆள் இல்லை. ஆனால் 'சித்திரமும் கைப்பழக்கம்' என்பதை போல கிறுக்கல்களில் துவங்கி சறுக்கல்களை சந்தித்து இன்று அற்புத ஓவியராகி இருக்கிறார்.ஆரம்பத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்களின் படங்களை வரைந்து கொண்டிருந்த குணாகரன், நாளடைவில் யாரை பார்க்கிறாரோ அவரை ஐந்தே நிமிடங்களில் அத்தனை தத்ரூபமாக வரைந்து அசத்தி வருகிறார்.

இதுவரை 500க்கும் மேற்பட்டோரின் படங்களை வரைந்து, அதற்கு எவ்வித பணமும் பெறாமல் திறமையை மெருகேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் பில்லமநாயக்கன்பட்டி கிராமமே இவரை கொண்டாடுகிறது. இது மட்டுமின்றி கைவினை பொருட்களை நேர்த்தியாக, அழகாகவும் வடிவமைப்பதில் திறமை பெற்றுள்ளார். வீடு முழுவதும் ஒட்டியுள்ள இவரது ஓவியங்கள் அருங்காட்சியகத்தை ஞாபகப்படுத்துகின்றன. குணாகரன் கூறியதாவது: ஓவியம் சொல்லித்தர எவருமில்லை. ஊரடங்கு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இணையத்தை பார்த்தே ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன்.

யாரையும் ரோல் மாடலாக கொள்ளவில்லை. ஆனால் நான் ரோல்மாடலாக இருக்க விரும்புகிறேன். என்றார். இணையத்தில் எதைஎதையோ தேடும் இளைஞர்கள் மத்தியில், இப்படித்தான் திறமையை வெளிக்கொணர வேண்டும் என வழிகாட்டிய இவரை பாராட்ட 95148 58467ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X