விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நேரடியாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யபட்டோருக்கு ஊக்குவிப்பு பயிற்சி நடைபெற்றது.விழுப்புரம் காவலர் மண்டபத்தில், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு 'முழுமையான வாழ்க்கை' தலைப்பில் இரண்டு நாள் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.முகாமை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., நல்லசிவம் முன்னிலை வகித்தனர்.பயிற்சியில், சட்டம் ஒழுங்கு, வழக்குகளை விசாரிக்கும் முறை, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பிரச்னைகளை கையாளும் முறை, உடற்பயிற்சி மேற்கொள்வதன் முக்கியத்துவம், குடும்பம் மற்றும் பணியில் மன அழுத்தமின்றி இருக்கும் முறைகள் கற்று தரப்பட்டது.பயிற்சியை, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., முத்துமாணிக்கம், ேஹாலிஸ்டிக் லைப் நிறுவனம் சாவித்திருநீலா ஆகியோர் அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE