சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி உருவபொம்மை எரிப்பு

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்: சசிகலாவை விமர்சித்ததை கண்டித்து தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருவப் பொம்மையை அ.ம.மு.க.,வினர் எரித்ததால் பரபரப்பு நிலவியது.திருச்சியில் தி.மு.க., சார்பில் சமீபத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.ம.மு.க., தலைவர் சசிகலாவையும், தமிழக முதல்வர்

திருவெண்ணெய்நல்லுார்: சசிகலாவை விமர்சித்ததை கண்டித்து தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருவப் பொம்மையை அ.ம.மு.க.,வினர் எரித்ததால் பரபரப்பு நிலவியது.

திருச்சியில் தி.மு.க., சார்பில் சமீபத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.ம.மு.க., தலைவர் சசிகலாவையும், தமிழக முதல்வர் பழனிசாமியையும் விமர்சனம் செய்தார்.இதுதொடர்பாக அ.ம.மு.க.,வினருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே சமூக வலைதளத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வந்தது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கூட்ரோட்டில் நேற்று காலை 10:00 மணியளவில் முன்னாள் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் அ.ம.மு.க.,வினர் திடீரென தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனை அறிந்த தி.மு.க.,வினர் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் திரண்டு பகல் 2:00 மணிக்கு அதே கூட்ரோட்டில், சசிகலா மற்றும் தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, தி.மு.க.,வினர் வைத்திருந்த உருவப் பொம்மைகளை கைப்பற்றினர்.இதனால், தி.மு.க.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X