சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செவலப்புரை வராக நதிக்கரையில் இறந்து கிடந்த முதலை குட்டி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
செஞ்சி: செஞ்சி அருகே வராக நதிக்கரையில் முதலைக் குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செவலப்புரை கிராமத்தில் வராக நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.இந்தஅணையின் பாறை மீது இரண்டு மாதம் முன்பு முதலை குட்டி ஒன்று இருந்ததை சிலர் மொபைல் போனில் படம் பிடித்துவாட்ஸ் ஆப்பில் பதிவிட்டனர்.இதையடுத்து

செஞ்சி: செஞ்சி அருகே வராக நதிக்கரையில் முதலைக் குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செவலப்புரை கிராமத்தில் வராக நதியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.இந்தஅணையின் பாறை மீது இரண்டு மாதம் முன்பு முதலை குட்டி ஒன்று இருந்ததை சிலர் மொபைல் போனில் படம் பிடித்துவாட்ஸ் ஆப்பில் பதிவிட்டனர்.இதையடுத்து மேல்மலையனுார் வருவாய்த்துறையினர் ஆற்றில் முதலை இருப்பதால் பொது மக்கள்ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்தனர். ஆனால் அதையும் மீறி தொடர்ந்து ஆற்றில் பொது மக்கள் குளித்துவருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை வராகநதிக் கரையில் சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலை குட்டி கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தது.செஞ்சி வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர், இறந்து கிடந்தமுதலை குட்டியை எடுத்து சென்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். மேலும், முதலை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X