செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர், கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மார்கழி மாத ஸ்ரீராம பஜனை சிறப்பு வழிபாடு நடந்தது.இதை முன்னிட்டு கோதண்டராமருக்கு காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஸ்ரீராம பஜனையில் ராமமூர்த்தி திருமால் வணக்கம் செய்தார். அறக்கட்டளை நிர்வாகி துரை பாரதிராஜா முன்னிலை வகித்தார். ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன் ஆன்மிக உரை நிகழ்த்தினார்.விழா குழுவினர் சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நடந்தது. ஜானகிராமன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE