அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியை நம்புங்கள்: நல்லதே நடக்கும்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
மதுரை : ''தமிழ் மொழி மீது அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருக்காதா. பிரதமர் மோடியை நம்புங்கள், பா.ஜ.,வை நம்புங்கள், உங்களுக்கு நல்லதே நடக்கும்,'' என, மதுரையில் பா.ஜ., மாநகர் மகளிரணி சார்பில் நடந்த நம்ம ஊர் பொங்கல் விழாவில் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசினார். மாநகர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை

மதுரை : ''தமிழ் மொழி மீது அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருக்காதா. பிரதமர் மோடியை நம்புங்கள், பா.ஜ.,வை நம்புங்கள், உங்களுக்கு நல்லதே நடக்கும்,'' என, மதுரையில் பா.ஜ., மாநகர் மகளிரணி சார்பில் நடந்த நம்ம ஊர் பொங்கல் விழாவில் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசினார்.

மாநகர் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார்.குஷ்பு பேசியதாவது:2021 தேர்தலில் பா.ஜ.,க்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது.இன்று பா.ஜ., என்றாலே எதிர்கட்சிகள் பதறுகின்றனர். காங்., தி.மு.க., மடியில் கனம் வைத்துள்ளனர். அதனால் தான் பா.ஜ., என்ற சுத்தமான கட்சியை பற்றி பேசும் போது எதிர்கட்சியினர் பயப்படுகின்றனர்.இங்கு பா.ஜ., மீதான நம்பிக்கையால் பெண்கள் இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள். எதிர்கட்சியில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்காது. காங்.,தி.மு.க.,வில் இருந்து நான் வந்துள்ளேன்.

அந்த இரு கட்சிகளை பற்றி எனக்கு தெரியும். அங்கு இருப்பவர்கள் சுத்தம் என கூற முடியாது. யாரால் நம்மை காப்பாற்ற முடியும் என்றால் பிரதமர் மோடியால் மட்டும் தான் முடியும்.2014 க்கு பின் ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி., வந்தது. இனி இந்தியாவை யாரும் காப்பாற்ற முடியாது என்றனர். 2019 ல் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி, கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தலைவர் என உலகில் முதலிடத்தில் உள்ளார்.

முதல்வர் பழனிசாமி தற்போது கூட தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விட்டார். இரு நிபந்தனைகளை ஏற்றதால் தான் பேச தயார் என ஸ்டாலின் கூறுகிறார். எதிர்கட்சி தலைவருக்கு இது அழகா. பேச எதிர்கட்சி தலைவருக்கு தைரியம் இருக்க வேண்டும். தைரியம் மக்களுக்கு நல்லது செய்தால் வரும். ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே தி.மு.க.,வினருக்கு கிடையாது. குடும்ப அரசியல் மட்டுமே செய்கின்றனர். குடும்பத்தில் யார் வருகிறார்கள். அவர்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம் என செயல்படுகின்றனர்.

ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த திட்டங்களை கூறினாலே போதும். ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு. பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையால் நாம் ஜல்லிக்கட்டு கொண்டாடவுள்ளோம். தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று மேலும் இதுபோன்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வரும். நான்கு மாதங்களில் ரூ.20 லட்சம் கோடிக்கு திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். நீங்கள் பெறும் ஒவ்வொரு திட்டமும் பிரதமர் மோடியின் திட்டங்கள் தான்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழ் பேசுவதில் கூட சில நேரங்களில் குழம்பி விடுகிறார். பிரதமர் மோடி தமிழகம் வந்தாலும் சரி. இந்தியாவில் எங்கு சென்றாலும் சரி அமெரிக்கா சென்றாலும் சரி தமிழில் திருக்குறளை குறிப்பிட்டு துவக்குகிறார். கவிதை கூறி துவக்குகிறார்.

தமிழ் மீது அவருக்கு அவ்வளவு அக்கறையிருக்கிறது. மொழி மீது அக்கறை இருக்கும் போது தமிழக மக்கள் மீது அவருக்கு அக்கறை இருக்காதா. 2021 தேர்தலில் பா.ஜ.,விற்கு ஓட்டளிக்க வேண்டும். நல்லது நடக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் பா.ஜ.,விற்கு ஓட்டளியுங்கள் என்றார்.பார்வையாளர் கதலிநரசிங்கபெருமாள், மகளிரணி நிர்வாகிகள் மீனாம்பிகை, மீனா, ரோஜாராணி, காந்திமதி, வெற்றிசெல்வி, பொருளாளர் பாலமுருகன், வர்த்தக பிரிவு தலைவர் சகாதேவன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஷா, ஊடக பிரிவு தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X