வில்லியனுார்: 'தினமலர்' செய்தி எதிரொலியால் சேதமடைந்த சேந்தநத்தம் கிராமசுடுகாட்டிற்குசெல்லும் சாலையை சரிசெய்தனர்.வில்லியனுார் கொம்யூன் சேந்தநத்தம் கிராமத்தில் ஆரியப்பாளையம் செல்லும் மெயின்ரோட்டில் இருந்து சங்கராபரணி ஆற்றங்கரைக்கு செல்லும் 300 மீட்டர் சுடுகாட்டு பாதையில் பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைத்து கொடுத்தனர்.சில தினங்களாக பெய்த மழையில் சேந்தநத்தம் சுடுகாட்டு சாலை மூன்று இடங்களில் திடீர் என சரிந்து சாலை 3 அடி அகலத்திற்கு வந்துவிட்டது.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., உத்தரவின் பேரில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் மற்றும் இளநிலைப் பொறியாளர் பாலமுருகன் பார்வையிட்டுசேதமடைந்த பகுதியில் மண் கொட்டி சீரமைத்தனர். ஆற்றங்கரை வரை சாலையில் இருபுறமும் வளர்ந்துள்ள முள் புதர்களை அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE