சிறுமியருக்கு பயிற்சிஉத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள மானாம்பதி மற்றும் காஞ்சிபுரம் நெட்டேரி அங்கன்வாடி மையங்களில், குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், வாழ்க்கை கல்வி மற்றும் சுகாதார ஊட்டச்சத்து பயிற்சி, நேற்று வழங்கப்பட்டது.இதில், பெண் குழந்தைகளுக்கு தேவையான வாழ்க்கை கல்வி, சுகாதாரம் பேணுதல் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய பயிற்சியும், ஆபத்து ஏற்பட்டால் போலீசாரை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து, 38 பெண் குழந்தைகளை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நேரடி பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு பழைய பஸ் நியைம் அருகில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை, மாநில அரசு ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கிடவும், ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பை, 40 ஆக குறைத்து, அரசு வெளியிட்டுள்ள, அரசாணையைத் திரும்பபெற வேண்டும் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
'தரமற்ற விதை விற்க கூடாது'உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், விதைகள் விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கறி நாற்று பண்ணைகளில், சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் கலாதேவி, நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 'விவசாயிகளுக்கு தேவையான தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே, விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும். விதை உரிமம் இல்லாமல் அல்லது தரமற்ற விதைகள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடும் விதை விற்பனையாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் தெரிவித்தார்.
கல்லுாரியில் பொங்கல் விழாகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம், பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஸ்ரீமதி ராமலிங்கம் தலைமை வகித்தார்.வண்ணமயமான கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனர். இதில் கல்லுாரி பேராசிரியர், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு மற்றும் 'ஆன்லைன்' வழியாக செமஸ்டர் தேர்வு நடைபெறுவதால், மாணவியர், பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE