சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது

Added : ஜன 10, 2021
Share
Advertisement
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, விடுதலை சிறுத்தை நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த, கடலுார் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராடன் மகன், மணிமாறன், 47. லத்துார் ஒன்றிய, வி.சி., செயலர். இவர் மீது, பிறரிடம் பணம் கேட்டு மிரட்டியது, தாக்கியது உள்ளிட்ட ஏழு வழக்குகள், கூவத்துார் போலீசில் உள்ளன. கடந்த, 2010ம் ஆண்டு, ஒருங்கிணைந்த,

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, விடுதலை சிறுத்தை நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த, கடலுார் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராடன் மகன், மணிமாறன், 47. லத்துார் ஒன்றிய, வி.சி., செயலர்.

இவர் மீது, பிறரிடம் பணம் கேட்டு மிரட்டியது, தாக்கியது உள்ளிட்ட ஏழு வழக்குகள், கூவத்துார் போலீசில் உள்ளன. கடந்த, 2010ம் ஆண்டு, ஒருங்கிணைந்த, காஞ்சிபுரம் மாவட்ட ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.கடந்த மாதம், கல்பாக்கம், புதுப்பட்டினம் பகுதியில், பெருமாள்சேரி கட்சி கொடியேற்ற விவகார வழக்கு தொடர்பாக, கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.அப்போது, போலீசார் மற்றும் உயரதிகாரிகளை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, வழக்கு பதிந்த கல்பாக்கம் போலீசார், தலைமறைவாக இருந்த மணிமாறனை, காத்தங்கடை பகுதியில், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X