பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாளப்பட்டியில் 600 ஆண்டுகள் பழமையான நடுகல்

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திண்டுக்கல், : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கர்நாடக பாணியிலான அடுக்கு நிலை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சின்னாளப்பட்டி அருகே மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் லட்சுமணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
 சின்னாளப்பட்டியில் 600 ஆண்டுகள் பழமையான நடுகல்

திண்டுக்கல், : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த கர்நாடக பாணியிலான அடுக்கு நிலை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சின்னாளப்பட்டி அருகே மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் லட்சுமணமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அக்கோயிலின் பின்புறம் 9 அடி உயரமும் 1 அடி அகலம் கொண்ட ஒரு தூணின் 4 பக்கங்களிலும் சிறிய சிற்பங்கள் இருந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில், அது அடுக்குநிலை நடுகல் என்பது கண்டறியப்பட்டது.தூணில் கீழே ஊன்றுவதற்கு 2 அடி தவிர்த்து, மீதியுள்ள 7 அடியில், ஒரு அடிக்கு ஒரு அடி என்ற அளவில் 7 பகுதியாக தூண் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் 7 அடுக்குகளில் சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் காணப்படும் நடுகல்இவ்வாறு பல அடுக்குகளாக நடுகல் சிற்பங்கள் அமைந்திருப்பதால் இதை 'அடுக்குநிலை நடுகல்' என்பர். இதன் ஒரு பக்கம் தரையில் புதைந்துள்ளது. எனவே அதில் உள்ள சிற்பங்களை அறிய முடியவில்லை. மீதியுள்ள 3 பக்கங்களிலும் சிற்பங்களை பார்க்கும்போது, கர்நாடக மாநிலத்தில் காணும் 'அடுக்குநிலை நடுகல்' போன்ற அமைப்பில் இருப்பதை அறியமுடிகிறது.

பல்லக்கில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு கவரி வீசும் பணியாட்கள், லிங்கத்தை வணங்கும் காளை உடலுடன் முனிவர், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன், பசுவிடம் பால் குடிக்கும் கன்று, இருபுறமும் இரு மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் ஆகியவை குறிப்பிடத்தக்க சிற்பங்கள். மேலும் வீரர்கள் தங்கள் மனைவியருடன் இருக்கும் சிற்பங்களும் அதிகளவில் உள்ளன.விஜயநகர மன்னர் காலம்உதவி பேராசிரியர் லட்சுமணமூர்த்தி கூறியதாவது: குழுவின் தலைவர் பல்லக்கில் அமர்ந்துள்ளார். இருவர் அதைத் தூக்கிச் செல்கின்றனர். ஒருவர் கவரி வீசுகிறார். குதிரையில் அமர்ந்த நிலையில் மூவரும், வாள் மற்றும் ஈட்டியுடன் 9 பேருமாக 12 வீரர்கள் உள்ளனர்.

இதன் மூன்று பக்கங்களில் மொத்தம் 26 பெண்களின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 20 பேர் கையை மேலே உயர்த்தியும், இருவர் கையில் குழந்தையுடனும், நால்வர் சாதாரணமாகவும் காட்சியளிக்கின்றனர்.சிற்பங்களில் ஒரு பசுவும் கன்றும், 4 மாடுகளும், 3 குதிரைகளும் காட்டப்பட்டுள்ளன. சிற்பங்களைச் சுற்றி கொடி, பூச்சரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. வீரர்கள் இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்துள்ளனர். நடுகல்லின் மேற்பகுதி கூடு போன்று அமைந்துள்ளது.இதுபோன்ற அடுக்குநிலை நடுகற்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

இதன் அமைப்பைக் கொண்டு மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் இரு குழுக்கள் அல்லது ஊர்களுக்கிடையில் நடந்த பூசலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் உடன்கட்டை ஏறிய அவர்களின் மனைவியர் நினைவைப் போற்றும் வகையில் இந்நடுகல் நடபட்டு இருக்கலாம். இது கி.பி., 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-ஜன-202103:46:10 IST Report Abuse
J.V. Iyer அருமை. அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X