விபத்தில் வாலிபர் பலிமாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, கரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம் மகன் தென்னரசு, 23. தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு, கோவளத்திலிருந்து திருப்போரூருக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். திருவிடந்தையை கடந்தபோது, பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தில் மோதியதில், தென்னரசு காயமடைந்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, அன்றிரவு இறந்தார். போலீஸ்காரர் காயம்மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலைய தலைமைக்காவலர், தணிகைவேல், 45.நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மாமல்லபுரம் குடியிருப்பிற்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார். மாமல்லபுரம், பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் கடந்தபோது, எதிரில் வந்த லாரி மோதி, தலையில் படுகாயமடைந்தார்.செங்கல்பட்டு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, பின், சென்னை, ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நிலம் அபகரித்தவர் கைது திருவள்ளூர்: அம்பத்துார், லலிதாதேவி; வில்லிவாக்கம், லதா ஆகியோர், திருவள்ளூர் வட்டம், பெருமாள்பட்டு கிராமத்தில், 1,240 ச.அடி மனையினை, 2009ல் வாங்கினர்.அந்த இடத்தில், பெருமாள்பட்டு, ஆசுராம் மகன், ஓம்பிரகாஷ் என்பவர், போலி ஆவணம் தயாரித்து, 2019ல், கிரயம் பெற்றதாக, பத்திரம் பதிவு செய்து, வீடு கட்டும் பணியை துவக்கி உள்ளார்.இது குறித்து, லலிதாதேவி மற்றும் லதா ஆகியோர், திருவள்ளூர், எஸ்.பி., அரவிந்தனிடம் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார், விசாரணை நடத்தி, ஓம்பிரகாஷ், 42, என்பவரை, கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE