தேர்தலுக்கான நாடகம் பா.ஜ., தலைவர் பாய்ச்சல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி: 'தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்ட நாடகத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை' என, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:காங்., நடத்தும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் கலந்து கொள்ளவில்லை. காங்., கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை தி.மு.க.,வினர் தெளிவுப்படுத்த வேண்டும். காங்., அரசு மெஜாரிட்டி அரசா அல்லது மெஜாரிட்டி இல்லாத அரசா

புதுச்சேரி: 'தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்ட நாடகத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை' என, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:காங்., நடத்தும் போராட்டத்தில் தி.மு.க.,வினர் கலந்து கொள்ளவில்லை. காங்., கூட்டணியில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை தி.மு.க.,வினர் தெளிவுப்படுத்த வேண்டும். காங்., அரசு மெஜாரிட்டி அரசா அல்லது மெஜாரிட்டி இல்லாத அரசா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.காங்., நடத்தும் போராட்டத்தை அவர்களது கட்சியினரும் ஆதரிக்கவில்லை; தி.மு.க.,வும் ஆதரிக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், மக்களை குழப்புவதற்காக தேவையற்ற போராட்டத்தை முதல்வர் நாராயணசாமி நடத்துகிறார்.மத்திய அமைச்சராக நாராயணசாமி இருந்த போது, கவர்னருக்கு தான் அதிகாரம் இருக்கிறது என கூறினார். இப்போது, மாற்றி பேசுகிறார். 50 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., கட்சி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்று தராதது ஏன்?தேர்தலுக்காக நடத்தப்படும் போராட்ட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை. காங்., கட்சிக்கு எதிரான அலை வீசுவதால், புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்.இவ்வாறு, அவர் கூறினார். பொதுச் செயலாளர்கள் செல்வம், மோகன்குமார், விவசாய அணி தலைவர் புகழேந்தி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X