பிரதான சாலையை மறித்து போராட்டம் முதல்வருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ., கண்டனம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி: நகரத்தின் பிரதான சாலையை மறித்து போராட்டம் நடத்தலாமா என முதல்வர் நாராயணசாமிக்கு அன்பழகன் எம்.எல்.ஏ.,கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:பதவியில் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றிய பொறுப்புணர்வு இருக்க வேண்டும். முதல்வர் நாராயணசாமிக்கும், காங்., கட்சிக்கும் இல்லை. போராட்டம் நடத்த எந்த கட்சிக்கும் உரிமையுண்டு. அந்த போராட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட,

புதுச்சேரி: நகரத்தின் பிரதான சாலையை மறித்து போராட்டம் நடத்தலாமா என முதல்வர் நாராயணசாமிக்கு அன்பழகன் எம்.எல்.ஏ.,கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:பதவியில் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றிய பொறுப்புணர்வு இருக்க வேண்டும். முதல்வர் நாராயணசாமிக்கும், காங்., கட்சிக்கும் இல்லை. போராட்டம் நடத்த எந்த கட்சிக்கும் உரிமையுண்டு. அந்த போராட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களுக்கு தொந்தரவு இல்லாத மைதானங்களில் போராட்டங்களை நடத்த வேண்டும்.ஒரு மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் பிரதான சாலையாக உள்ள அண்ணா சாலையில் போராட்டம் நடத்தலாமா? இது முதல்வருக்கு அழகா? இந்த இடத்தில் நடக்கும் போராட்டத்தால் நகருக்கு வரும் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.அங்கு போராட்டம் நடத்த அ.தி.மு.க., அனுமதி கேட்டால் அரசு தருமா? நகரின் பிரதான சாலையை மறித்து போராட்டம் நடத்துவது நியாயமா? ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகத் திற்கு கலெக்டரும், காவல்துறை தலைவரும் துணை போக கூடாது.இந்த ஆட்சிக்கு இன்னும் 2 மாத காலம்தான் உள்ளது. இந்த குறுகிய காலத்தில் கவர்னரை மாற்றி விட்டாலும் இவரால் ஒன்றும் செய்துவிட முடியாது.உண்மையிலேய மக்கள் மீது அக்கறை இருந்தால் தனது செயல்படாத தன்மைக்கு முழுமையாக பொறுப்பேற்று தானாக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் வரும் சட்ட சபை தேர்தலில் மக்கள், முதல்வர் நாராயணசாமிக்கும், காங்., கட்சிக்கும் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X