பொது l பாரதி உலா 2020 நிறைவு விழா. இடம்: தட்சிணாமூர்த்தி கலை அரங்கம், பி.எஸ்.உயர்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் எதிரில், மயிலாப்பூர், சென்னை - 600004. காலை, 10:20 மணி.l சென்னை கலாம் நண்பர்கள் சார்பில், பொங்கல் விழாவை முன்னிட்டு, ஐவர் குழு கால்பந்தாட்ட இறுதி போட்டி. இடம்: அன்னை சிவகாமி நகர், எண்ணுார். மதியம்: 12:30 மணி. ஆன்மிகம் l தியாகராஜ சுவாமி கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி மற்றும் பிரதோஷ நாயகருக்கு, அபிஷேகம், அலங்காரம். இடம்: திருவொற்றியூர். மாலை, 4:00 மணி.
நங்கநல்லுார், ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில், ஹனுமத் ஜெயந்தி விழா முன்னிட்டு, பாலாபிஷேகம், லட்சார்ச்சனை. காலை, 7:00 மணி மற்றும் மாலை, 4:00 மணி.l திருப்பாவை உபன்யாசம். வழங்குபவர்: வித்வான் உ.வே.பள்ளிக்கரணை திருமாலை நடாதுார் சேஷாத்ரி சுவாமி, இடம்: ஜெய் ஸ்ரீமத் நாராயணா ராமனுஜ கூடம், துக்காராம் முதல் தெரு, தி.நகர். மாலை, 5:00 மணி. யோகா பயிற்சி l பயிற்சியாளர்கள்: அருண்குமார், பால கிருஷ்ணன். இடம்: சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில் சாலை, வேலு மினி ஹால். -மாலை, 6:00 முதல் -7:30 மணிவரை. இசை l மடிப்பாக்கம், ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா, 31ம் ஆண்டு இசை விழா, ஸ்ரீரங்கம் வெங்கட் நாகராஜன் கர்நாடக இசை நிகழ்ச்சி. மாலை, 6:00 முதல் -8:00 மணிவரை. பொங்கல் விழா l தி.நகர், தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க தலைமை அலுவலகம், சமநோக்கு தைப்பொங்கல் விழா, சிறப்பு அழைப்பாளர் கலைமாமணி திருநங்கை சுதா. காலை, 10:00 மணி.
ஜோக், ஆடல், பாடல், மேஜிக், சிரிப்பு யோகா ஆகியவற்றுடன், 209வது அரங்கம். சிறப்பு விருந்தினர் முத்தழகன். அனுமதி இலவசம். மாலை, 4:25 மணி. இடம்: சத் சங்க மண்டபம், வடக்கு பூங்கா சாலை, சத் சங்கம் தெரு, வெங்கடாபுரம், அம்பத்துார். தொடர்புக்கு: 9789778442.l குரோம்பேட்டை, நியூ காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா. இடம்: நியூ காலனி, 16வது குறுக்கு தெரு, காலை, 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE