பொது செய்தி

இந்தியா

அமைப்பு சாரா தொழிலாளர் அணி தலைவராக சுரேஷ் நியமனம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் தலைவராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் முன்னிலையில் தொழிலதிபர் சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.இதைதொடர்ந்து, பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் தலைவராக

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் தலைவராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, கடந்த வாரம் புதுச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் முன்னிலையில் தொழிலதிபர் சுரேஷ் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.இதைதொடர்ந்து, பா.ஜ., அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் தலைவராக சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். எல்லப்பிள்ளைச்சாவடி சித்தானந்தா நகரில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில், அமைப்பு சாரா தொழிலாளர் அணி தலைவர் சுரேஷூக்கு நியமன ஆணையை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில பா.ஜ., பொதுச் செயலா ளர்கள் செல்வம், மோகன்குமார், செயலாளர் ரத்தினவேலு, நகர மாவட்ட தலைவர் வக்கீல் அசோக்பாபு, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வில்லியனுார் மாவட்ட தலைவர் ஆனந்தன், விவசாய அணி தலைவர் புகழேந்தி, பொருளாளர் ஜெய், அறிவு சார் அணியின் இணை அமைப்பாளர் சாய் சுதாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X