பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கல்வி அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு கல்வித்துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது ரபிக் வரவேற்றார். மாநிலத் தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிவக்குமார், மண்டலச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் பூமிபாலன் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலர் ஒன்றியத்தில் மாநில

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தமிழ்நாடு கல்வித்துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமது ரபிக் வரவேற்றார். மாநிலத் தலைவர் ராஜராஜன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிவக்குமார், மண்டலச் செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் பூமிபாலன் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலர் ஒன்றியத்தில் மாநில துணைத்தலைவர் துரைப்பாண்டி, செயலாளர்கள் பார்த்தசாரதி, தயானந்த் கலந்து கொண்டனர்.இளநிலை உதவியாளர் அல்லாத பணியிடங்களை அனுமதிக்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி. அமைச்சுப் பணியாளர் களுக்கு வழங்க வேண்டிய கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர், நிர்வாக கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சுப் பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X