வேடசந்துார் : மாவட்ட போலீசாருக்கான இட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்ட நிலையில், முறையாக செயல்படுத்தவில்லை என்ற குமுறல் போலீசாரிடையே எழுந்துள்ளது.
மாவட்ட காவல் துறையில் இரு மாதங்களுக்கு முன்பு பல்வேறு ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு, அவர்கள் விருப்பப்படி மாவட்டத்திற்குள் இடமாறுதல் வழங்கப்பட்டது. கொரோனாவை கருத்தில் கொண்டு வழங்கிய இந்த உத்தரவை பெற்ற பல போலீசார் முறையாக இடம் மாறிவிட்ட நிலையில், இன்னும் 50 பேர் இடமாறுதல் பெறாமலேயே உள்ளனர்.காரணம் 'பசை' உள்ள அந்த இடங்களை விட்டு நகர முடியாமலோ, அல்லது உயர் அதிகாரிகளால் நகரவிடாமல் தடுக்கப்பட்டோ இருப்பதாக மற்ற போலீசார் குமுறுகின்றனர். இதனால் இட மாறுதல் கிடைத்த போலீசார் சிலர், தங்களுக்கு ஒதுக்கிய இடங்களுக்கு செல்லமுடியாமல் குமுறுகின்றனர்.
எஸ்.பி., பொறுப்பை கவனிக்கும் டி.ஐ.ஜி., முத்துச்சாமி இந்த இடமாறுதல் உத்தரவை முறையாக செயல்படுத்த முன்வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE