சென்னை, : பக்தர்கள் வசதிக்காக, பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற இணைய தள முகவரி வாயிலாக, இன்று மாலை, 4:30 மணிக்கு நந்தி அபிஷேகமும், தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு, https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற இணைய தள முகவரி வாயிலாக, இன்று மாலை, 4.00 மணி முதல் நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருவேற்காடு, வேதபுரிஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு, https://www.youtube.com/channel/UC27E9PcBidCNpJIbLqRBvPQ/videos?view_as=subscriber என்ற இணையதள முகவரி வாயிலாக, இன்று மாலை, 4.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE