சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்து இறந்தவர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம் : தீக்குளித்த தற்கொலை செய்த நபரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராசு கண்ணாயிரம், 39. இவரது மனைவி புவனேஸ்வரி, 35. இவர்களுக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர்.புவனேஸ்வரி, அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பணம் செலுத்தி

கீழ்ப்பாக்கம் : தீக்குளித்த தற்கொலை செய்த நபரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராசு கண்ணாயிரம், 39. இவரது மனைவி புவனேஸ்வரி, 35. இவர்களுக்கு, ஐந்து குழந்தைகள் உள்ளனர்.புவனேஸ்வரி, அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பணம் செலுத்தி உள்ளார்.அவரது தெருவில் வசிப்பவர்கள் சிலரிடம் பணம் வாங்கி, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், நிதி நிறுவனம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள், திருப்பி கேட்டதால், மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, அக்டோபரில் தீக்குளித்து தற்கொலை செய்தார்.

ஊருக்கு திரும்பிய செல்வராசு கண்ணாயிரத்திடம், பணம் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்ததால், மனமுடைந்தவர், டிச., 31ம் தேதி தீக்குளித்தார்.அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது உறவினர்கள், பண மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, அவரது உடலை வாங்க மறுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கலைந்து செல்ல வலியுறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X