பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு 1,010 சிறப்பு பஸ்கள்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
கோவை:பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து, 1,010 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை கொண்ட கோவை கோட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை சென்னை, மதுரை, தேனி,

கோவை:பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக, கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து, 1,010 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை கொண்ட கோவை கோட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும், 11ம் தேதி முதல், 13ம் தேதி வரை சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, 1,010 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொங்கல் முடிந்து பிற பகுதிகளில் இருந்து பயணிகள் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் திரும்ப ஏதுவாக, 17 முதல், 19ம் தேதி வரை, 1,300க்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் கோவை உட்பட பிற கோட்டங்களில் இருந்தும் இயக்கப்படுகின்றன.நெரிசலை தவிர்க்க, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கோவை 'கொடிசியா' வளாகத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது. வரும், 12 முதல், 14ம் தேதி வரை சேலம், திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து, இயக்கப்படுகின்றன.பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, குடிநீர் வசதி, மொபைல் கழிவறை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X