சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கியவருக்கு 'காப்பு'

Added : ஜன 10, 2021
Share
Advertisement
புழல் : சரக்கு வாகனம், கார் மீது உரசிய சம்பவத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கியவர் கைதானார். சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, கோ.சி.மணி தெருவைச் சேர்ந்தவர் தயாநிதி, 27. அவர், நேற்று முன்தினம், புழல் மத்திய சிறை சாலை அருகே காரில் சென்றார்.அப்போது, காரை கடக்க முயன்ற சரக்கு வாகனம், அந்த காரின் மீது உரசியது. இதனால், காரை ஓட்டி வந்த தயாநிதி, சரக்கு வாகன ஓட்டுனர் சிரஞ்சீவியை அடித்து,

புழல் : சரக்கு வாகனம், கார் மீது உரசிய சம்பவத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யை தாக்கியவர் கைதானார்.

சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, கோ.சி.மணி தெருவைச் சேர்ந்தவர் தயாநிதி, 27. அவர், நேற்று முன்தினம், புழல் மத்திய சிறை சாலை அருகே காரில் சென்றார்.அப்போது, காரை கடக்க முயன்ற சரக்கு வாகனம், அந்த காரின் மீது உரசியது. இதனால், காரை ஓட்டி வந்த தயாநிதி, சரக்கு வாகன ஓட்டுனர் சிரஞ்சீவியை அடித்து, அவரது வாகன சாவியை பறித்தார்.இது குறித்து, அவர், அங்கு பணியில் இருந்த, புழல் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ஜான்பீட்டரிடம், 58, புகார் செய்தார். எஸ்.ஐ., ஜான்பீட்டர், தயாநிதியிடம் விசாரித்தார். அப்போது, அவர், எஸ்.ஐ.,யையும் தாக்கி, அவரிடம் தகராறு செய்தார். இதையடுத்து, எஸ்.ஐ., புழல் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், தயாநிதியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X