நங்கநல்லுார் : ஹனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நங்கநல்லுார், ஆஞ்சநேயர் கோவிலில், யாகசாலை துவங்கி, ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.மார்கழி மாதம், அமாவாசை, மூலநட்சத்திரமும் கூடிய நாளன்று, ஆஞ்சநேயர் கோவில்கள், வைணவ கோவில்களிலும், ஹனுமத் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சென்னை, நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, 3ம் தேதி லட்சார்ச்சனை துவங்கியது. 13ம் தேதி நிறைவு பெறுகிறது.விழாவின் சிறப்பு நிகழ்வாக, 36 அடி உயர மூலவருக்கு, சந்தன காப்பு அலங்காரம் நேற்று காலை, 8:00 மணிக்கு செய்யப்பட்டது.
இதற்காக, வனத்துறை உதவியுடன், 36 கிலோ சந்தன கட்டை பெறப்பட்டு, அதை கும்பகோணத்தில் அரைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.மேலும், தேனியில் இருந்து வரவழைக்கப்பட்ட, 32 அடி உயர ஏலக்காய் மாலை, சுவாமிக்கு சாத்தப்பட்டது.நேற்று அதிகாலை முதல், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்தனர்.கோவில் நிர்வாகம் சார்பில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன.பின், யாகசாலை துவக்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. இன்று, ஆஞ்சநேயருக்கு, ஷீராபிஷேகம்எனும் பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.வரும், 12ம் தேதி ஹனுமத் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன் செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE