தந்தை கண்டிப்பு மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை கண்டிப்பு மாணவி தற்கொலை

Added : ஜன 10, 2021
Share
பம்மல் : சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். சென்னை, பம்மல், கிருஷ்ணா நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மகள் ஜனனி, 17; பிளஸ் 2 படித்து வந்தார்.கடந்த, 14ம் தேதி, அடையாறில் உள்ள, 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில், மகளை, 'ஆன்லைன்' வகுப்பில், விநாயகம் சேர்த்துஉள்ளார். நான்கு

பம்மல் : சரியாக படிக்காததை தந்தை கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, பம்மல், கிருஷ்ணா நகர், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் விநாயகம்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது மகள் ஜனனி, 17; பிளஸ் 2 படித்து வந்தார்.கடந்த, 14ம் தேதி, அடையாறில் உள்ள, 'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில், மகளை, 'ஆன்லைன்' வகுப்பில், விநாயகம் சேர்த்துஉள்ளார். நான்கு நாட்களுக்கு முன், சரியாக படிக்கவில்லை என, மகளை கண்டித்து உள்ளார்.இந்நிலையில், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, ஜனனி, துாக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஜனனி இறந்தது தெரியவந்தது. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X