சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மூன்றாவது அணியின் கையில்!

Updated : ஜன 10, 2021 | Added : ஜன 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், நீண்ட காலமாக பேசப்படும் விஷயம், மூன்றாவது அணி. இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு தலைமை வலுவாக தோன்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே ஏற்படும்.சில தேர்தல்களில், அப்படி மூன்றாவது அணி உருவானாலும், அதுவும் 'திராவிட' அணியாகவே இருந்தது என்பதால், வெற்றி பெறவில்லை.இதனால், இரு
     இது உங்கள் இடம்

அரங்க.சேகர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியலில், நீண்ட காலமாக பேசப்படும் விஷயம், மூன்றாவது அணி. இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு தலைமை வலுவாக தோன்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடையே ஏற்படும்.சில தேர்தல்களில், அப்படி மூன்றாவது அணி உருவானாலும், அதுவும் 'திராவிட' அணியாகவே இருந்தது என்பதால், வெற்றி பெறவில்லை.இதனால், இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றன.தற்போதைய சூழலில், மீண்டும் அந்த நிலை தான் ஏற்படும். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.பிற கட்சிகள், பிரசாரத்தை இன்னும் துவக்காமல் உள்ளன. காரணம், இன்று வரை கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட, அக்கட்சிகள் விரும்புகின்றன. கூட்டணி தலைமை இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. இத்தகைய நிலையில், 'மூன்றாவது அணி, என் தலைமையில் அமையும்' என, மக்கள் நீதி மையத் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

அவர், தன் நீண்ட கால நண்பர் ரஜினி உள்ளிட்ட மற்றவர்களிடம் ஆதரவு கேட்கப் போகிறாராம். மூன்றாவது அணி, யார் தலைமையில் அமைந்தாலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை சிதறவிடாமல் பெற்றால் தான், ஓரளவு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.ஆளாளுக்கு, 'நான் தான் முதல்வர் வேட்பாளர்' என்ற வகையில் புறப்பட்டால், மாற்றம் என்பது, தமிழக அரசியலில் கானல் நீராகிவிடும்.தமிழகத்தில் நடுநிலை வாக்காளர்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீணாக போய்விடாமல் காப்பாற்றுவது, உறுதியாக அமையும் மூன்றாவது அணியின் கையில் தான் உள்ளது.


தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர்!


வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு -- காஷ்மீரில் சமீபத்தில் நடந்த, மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் முடிவு, மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தத் தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட, ஏழு கட்சிகள் இணைந்து, 'குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி' என்ற பெயரில் களமிறங்கின.இதுவரை வெளியிடப்பட்டுள்ள, 276 இடங்களுக்கான முடிவுகளில், குப்கர் கூட்டணி, 110 இடங்களில் வென்றுள்ளது. 74 இடங்களை பிடித்து, தனிப் பெரும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது. 49 இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளனர். காங்., 26 இடங்களில் வென்றுள்ளது.அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும், முதல் தேர்தல் இது. அதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது.கடந்த, 30 ஆண்டுகளில் இருந்ததுபோல பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகள், தேர்தல் புறக்கணிப்பு மிரட்டல் ஏதும் விடுக்க வில்லை.

தேர்தல் நடத்தியதில் முறைகேடு எனக் குரல் எழுப்பவில்லை.மாவட்ட கவுன்சில் தேர்தல் மூலமாக துவங்கியுள்ள, அரசியல் செயல்பாடு தொடர வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் அமைதி, ஸ்திரத்தன்மை நோக்கி செயல்பட முன்வந்த மாநில அமைப்புகளை, மத்திய அரசு ஊக்கப் படுத்த வேண்டும்.'குப்கர்' கூட்டணியில் சேராமல், தேசிய ஒருமைப்பாடு மீது, காங்கிரசுக்கு உள்ள பிடிப்பை, அக்கட்சியும் உறுதிப்படுத்தி உள்ளது. பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.சிறப்பு அந்தஸ்தை மட்டும் மையமாக வைத்து, அரசியல் செய்யும் பா.ஜ., மற்றும் குப்கர் கூட்டணி மீது, மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை, சுயேச்சைகளின் வெற்றி புலப்படுத்துகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் வளர்ச்சி பணிகளுக்கு, உள்ளாட்சி வழியாக நிதி வழங்க, மத்திய அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது. இனி, ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சி காணும்.அங்குள்ள, இணையம் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும். 'ஆன்லைன்' அரசு நிர்வாகத்தை அமல்படுத்த வேண்டும். இதனால், இடைநிலை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சுரண்டல் குறையும்.ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் வலுவடைந்தால் தான், அம்மாநில மக்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய முடியும்.
'இஸ்ரோ'விற்குள் அன்னிய சக்தியா?


பொன்.கருணாநிதி, கோட்டூர், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'வின் மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா, சமீபத்தில் தெரிவித்த கருத்து அதிர்ச்சியலையை உருவாக்கியுள்ளது.'கடந்த, 2017 மே 23ல், இஸ்ரோ தலைமை அலுவலகத்தில், கூட்டம் நடந்த பின், தோசை, சட்னி வழங்கப்பட்டது. சட்னியில், 'ஆர்செனிக் டிரயாக்சைடு' என்ற விஷம் கலந்து இருந்தது' என்ற அவரது குற்றச்சாட்டு, மிக அதிர்ச்சியானது. இதை, நாம் சாதாரணமாக கடந்து போய் விட முடியாது.இஸ்ரோவில் உண்மையில் என்ன தான் நடக்கிறது?

இஸ்ரோ என்ன மர்ம தேசமா?இவரது குற்றச்சாட்டு குறித்து, மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.நம் நாட்டின் அறிவியல் வளர்ச்சி, குறிப்பாக விண்வெளி ஆய்வு, பல நாடுகளை எரிச்சலடைய வைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில், நாமும் விண்வெளியில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறோம்.எனவே, நம் விண்வெளி ஆய்வை தடுக்க, வெளிநாட்டு சதி நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.உச்சக்கட்ட பாதுகாப்பில் இருக்கும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குள், அன்னிய சக்திகள் நுழைந்து விட்டதோ என்ற ஐயத்தை, இவரது பேட்டி உருவாக்கி விட்டது.

அன்னிய நாட்டு சக்திகள், இஸ்ரோவிற்குள் நுழைவதென்பது, நம் தேச பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால்.தபன் மிஸ்ராவின் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தி, அன்னிய சக்திகள் மட்டுமின்றி, தேச விரோதிகளையும் கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மத்திய அரசின் கடமை.அவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை, தேச விரோத சக்திகளுக்கு மிக பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பின்னணியில் இருப்போர் யார்?


ரா.கீர்த்திப்பிரியன், துடியலுார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில், 45 நாட்களுக்கு மேல், புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.உத்தரகண்ட் போன்ற மாநிலங்களின் விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தில் இருந்து, சில விளக்கம் பெற்று, போராட்டத்தில் இருந்து விலகி விட்டனர்.

சம்பந்தமே இல்லாமல், கனடா நாட்டின் பிரதமர், டில்லி போராட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளார். அந்த சட்டம் பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாமல், இங்குள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள், அதை எதிர்த்து வருகின்றனர்.பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டம் என்றாலே, சில இயக்கங்கள், 'குஷி' அடைந்து மதம், இனம், மொழி, கார்ப்பரேட் என, கத்தத் துவங்கிவிடும்.

போராட்டம் நடத்துவோருக்கு சிற்றுண்டி, டீ, மசாஜ் என, சகல வசதியையும் செய்து கொடுப்பர்.சம்பந்தம் ஏதும் இல்லாமல், 2,500க்கும் மேற்பட்ட, மொபைல்போன் டவர்களை, போராட்டக்காரர்கள் உடைத்துள்ளனர். அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.டில்லியில் நடக்கும் போராட்டத்திற்கும், மொபைல்போன் டவர் பாதுகாக்கும் அப்பாவி ஊழியருக்கு என்ன தொடர்பு? போராட்டக் கும்பல், அவர்களை ஏன் கண்மூடித்தனமாக தாக்க வேண்டும்? அந்த போராட்டம், சாத்வீகமானதல்ல; கொடூரமானது என்பதை, மக்கள் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.

தற்போதய புள்ளிவிபரக் கணக்குபடி, நம் நாட்டு விவசாயியின் சராசரி ஆண்டு வருமானம், 77 ஆயிரத்து, 124 ரூபாய். இதில், பீகார் மாநில விவசாயிகள், 42 ஆயிரத்து, 684 ரூபாய் மட்டும் பெறுகின்றனர். பஞ்சாப் விவசாயியின் ஆண்டு வருமானம், 2.17 லட்சம் ரூபாய்.குறைவான வருமானம் பெறும் விவசாயிகள், புதிய வேளாண் சட்டத்தை வரவேற்கின்றனர். இதனால், தங்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என, நம்புகின்றனர்.ஆனால் அதிக வருமானம் ஈட்டும் விவசாயிகள், இச்சட்டத்தை எதிர்க்கின்றனர்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், 26ம் தேதி குடியரசு தினம் அன்று, டில்லியில் டிராக்டர் ஊர்வலம் நடத்தப் போவதாக, போராட்டக்காரர்கள் பயமுறுத்துகின்றனர்.இதையெல்லாம் பார்க்கும் போது, போராடுவோர் நிச்சயமாக விவசாயிகள் அல்ல என்பது தெளிவாக புரிகிறது. பிரச்னைக்குத் தீர்வு காண்பது என்பது, அவர்களின் நோக்கம் அல்ல; இந்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டும் என்று தான், அவர்கள் போராடுகின்றனர்.

இந்த போராட்டக் கும்பல், பேச்சு வார்த்தையின்போது, மத்திய அரசு கூற உள்ள முழு விபரங்களை, அதற்கு முன்தினமே ஒப்படைக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கிறது.அதன் பின்னணி என்ன... அந்த விபரத்தை பெற்று, வேறு யாரிடமோ கொடுத்து, அவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்பது தானே.போராட்டத்தை இயக்குவது யார், அவர்களின் நோக்கம் என்ன என்பதை, மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.இந்த போராட்டத்தை விரிவுப்படுத்தி, அதை நாட்டின் பிரச்னையாக வளர்க்க, சில அன்னிய சக்திகள் முயற்சிக்கின்றன என்பது தெளிவு.எனவே மத்திய அரசு, இப்போராட்டத்தை தீவிரமாக கண்காணித்து, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.l


தி.மு.க., ஆட்சியை மறக்கலாமா?


டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழகத்தில், ஐந்து முறை முதல்வராக ஆட்சி புரிந்தார், என் தந்தை கருணாநிதி' என, ஓயாமல் பேசுகிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். ஐந்து முறை, அவர் எப்படி வென்றார் என்பதைப் பார்ப்போம்...

கடந்த, 1969ல், எம்.ஜி.ஆர்., கொடுத்த வாய்ப்பால், முதல்வராக மூன்று ஆண்டுகள் இருந்தார். 1972ல், எம்.ஜி.ஆர்., தயவால் மீண்டும், நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.கடந்த, 1989ல், அ.தி.மு.க., உடைந்ததால், ஆட்சிக்கு வந்தவர், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்தார். 1996ல், நடிகர் ரஜினியின் ஆதரவால், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். 2006ல், பெரும்பான்மையின்றி, காங்கிரசின் துணையோடு, ஐந்து ஆண்டுகள், 'மைனாரிட்டி' முதல்வராக பதவி வகித்தார்.இப்படி, துண்டு துண்டாக, ஐந்து முறை முதல்வராக பொறுப்பேற்றவர், 18 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். இதில் இரு முறை, ஆட்சி கலைக்கப்பட்டது.

விஞ்ஞானப்பூர்வ ஊழலுக்காக ஒருமுறையும்; விடுதலைப் புலிகளுக்கு இடம் கொடுத்து, இந்திய இறையாண்மைக்கு துரோகம் செய்ததால், மறு முறையும், கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது.கருணாநிதி பெற்ற பெரும் தோல்விகளைப் பார்ப்போம்.1977, 1980, 1985 ஆகிய மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரிடம் மூக்குடைப்பட்டார். 1991ல், ஜெ.,யிடம் படுதோல்வி அடைந்தார். 2011, 2016 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக, ஜெ.,விடம் படுதோல்வி அடைந்தார் கருணாநிதி.

ஜெ., 16 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். இ.பி.எஸ்., நான்கு ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். 1972ல், அ.தி.மு.க., கட்சி தோன்றியது. எம்.ஜி.ஆர்., 13 ஆண்டுகள்; ஜெயலலிதா, 16 ஆண்டுகள், இ.பி.எஸ்., நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளனர்.ஆனால், 1949ல் ஆரம்பிக்கப்பட்ட, தி.மு.க.,வில், அண்ணாதுரை, இரண்டு ஆண்டுகளும்; கருணாநிதி, 18 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளனர்.

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தன் மகன், மகள், பேரன் உள்ளிட்ட அனைவருக்கும் கட்சி மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி கொடுத்து, தமிழகத்தை சுரண்டினார்.நெருப்பு, கடன், விஷம் இவற்றை மொத்தமாக அழித்து விட வேண்டும்; இல்லையென்றால், அது திரும்பவும் வளரும். அந்த மாதிரி அழிக்கப்பட வேண்டிய தீய சக்தியாக, தி.மு.க., விளங்குகிறது என, மூத்த பத்திரிகையாளரான சோ, அன்றே கூறியுள்ளார்.தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்த ரவுடியிசம், நில அபகரிப்பு, மின்தடை, கட்ட பஞ்சாயத்து என, எதையும் மக்கள் மறக்கவில்லை; மறந்துவிடவும் கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜன-202114:22:39 IST Report Abuse
மோகனசுந்தரம் டாக்டர் அசோகன் அவர்கள் கூறியது போல் திருட்டு முன்னேற்ற கழகம் அழித்து ஒழிக்கபட வேண்டிய கட்சி.
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
11-ஜன-202108:38:23 IST Report Abuse
venkat Iyer அரங்க சேகர் கூறியது போல மூன்றாவது அணி என்று ஒன்று தமிழகத்தில் வருவதற்கு இல்லாத சூழ்நிலை தான் தற்போது தோன்றுகிறது.கமல் கொஞ்சம் ஆன்மீக விஷயங்களைப் பேசி இருந்தால் மக்களால் நிச்சயம் கவலைப்படக் கூடிய மனிதராவார். ஆனால் அவர் ஏன் நாத்திகத்தை எடுத்து தொடர்ந்து பேசி வருவது மிகவும் வேதனையாக இருக்கிறது. அதோடு தமிழகம் ஒரு பெரியார் மண் என்று அடிக்கடி கூறி வருகிறார். பெரியார் மண் எல்லாம் இன்று போய் விட்டது. மக்கள் கடவுளை நோக்கி படையெடுக்கிறார்கள். ஆன்மீகம் வளர்ந்து விட்டது. திராவிட கட்சிகளுக்கு மாற்று ஆன்மீக கட்சி நிச்சயம் தேவைப்படுகிறது. ஆன்மிகம் என்பது அனைத்து மதங்களுக்கும் பொதுவானது. இந்துக்களுக்கு மட்டும்தான் ஆன்மீகம் இல்லை. இஸ்லாமிய ஆன்மீகம் கிருத்துவ ஆன்மிகம் எல்லாத்தையும் உள்ளடங்கியது. ஆன்மிகம் தான் மனிதனை கட்டுப்படுத்துகிறது. அவருக்கு பயந்து மனிதர்கள் அனைவரும் செயல்படுவதால் ஆன்மிகம் தமிழகத்தில் வளர வேண்டும்.அதைப்படித்து கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய அரசியல் தலைவர்கள் இனிமேல் தமிழகத்தில் உருவாகாமல் இருந்தால் நல்லது. நமக்கு மேல் ஒரு சக்தி அது நிச்சயம் உருவாக்கம் என்று நம்புவோம். ஒன்று இல்லை என்று சொல்வது ஏற்க முடியாது. அவருடைய கருத்துக்களை மக்கள் அதாவது வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் ஆன்மீகத்தை வழிந்தால் மூன்றாவது கட்சியாக தனியாகவே செயல்படுத்தி வெற்றி காண முடியும். யாருக்காக அவர் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10-ஜன-202119:21:47 IST Report Abuse
Anantharaman Srinivasan மூன்றாவது அணி. இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருக்கவேண்டும். மாற்றகடசியில் இருந்த எவரையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அப்பத்தான் எல்லா மக்களுடைய நம்பிக்கையையும் பெறமுடியும்.. இல்லையேல் மூன்றாவது அணி வேஸ்ட். ஓட்டுக்களை பிரிக்கும் அவ்வளவே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X