சென்னை : யானை கவுனி பகுதியில், ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, யானைகவுனி பகுதியில், சொத்து பிரச்னையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த கைலாஷ் ஜலிந்தர் பாக்கரே, 32, விஜய் உத்தம் காம்ளே, 28, விலாஸ் ஜலிந்தர் பாக்கரே, 33, ஜெயமாலா ஷீத்தல் குமார், 29, ராஜூ உத்தம் ஷின்டே, 31, ரபிந்தரநாத்கர், 25 ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், ஆறு பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஆறு பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE