சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜன 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
த.மா.கா., தலைவர் வாசன்: அ.தி.மு.க., கூட்டணியில், நாங்கள் தொடருகிறோம். கூட்டணியில் இடம் பெறும் அனைவரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். நாங்கள், 100 சதவீதம் வெற்றி இலக்கை வைத்து செயல்படுவோம்; தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். அ.தி.மு.க., கூட்டணியில், சின்னம் குறித்த பிரச்னை இல்லை. முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை ஏற்கிறோம். மக்கள் பிரச்னைக்காக, சட்டசபையில், த.மா.கா., குரல்
 'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: அ.தி.மு.க., கூட்டணியில், நாங்கள் தொடருகிறோம். கூட்டணியில் இடம் பெறும் அனைவரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். நாங்கள், 100 சதவீதம் வெற்றி இலக்கை வைத்து செயல்படுவோம்; தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். அ.தி.மு.க., கூட்டணியில், சின்னம் குறித்த பிரச்னை இல்லை. முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை ஏற்கிறோம். மக்கள் பிரச்னைக்காக, சட்டசபையில், த.மா.கா., குரல் கொடுக்கும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதை பார்த்தால், அ.தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெறும் கட்சி, த.மா.கா., தான் என்பதில், யாருக்கும், 'டவுட்' வராது. இப்படி முன்கூட்டியே ஒட்டிக் கொண்டால் தான், கேட்ட தொகுதிகள், குறைச்சல் இன்றி கிடைக்கும் என்ற உங்கள் அணுகுமுறை, உண்மையில் பாராட்டக்கூடியது தான்!

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: நாங்கள் இன்றிலிருந்து தலித்துகள் அல்ல. எங்கள் மீது படிந்துள்ள, 'தலித்' என்ற கறையை போக்க வேண்டும்; இந்தியர்களாக வாழ விரும்புகிறோம். பட்டியலின வெளியேற்றம் செய்யாமல், அ.தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலுக்கு எப்படி ஓட்டு கேட்டு கிராமங்களுக்கு செல்ல முடியும்...

'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கை நியாயமானது தான். நாட்டு மக்கள் அனைவரும், இதுபோல, தனித்தனி பெயர்களில் அழைக்கப்படுவதில்லை தான். ஆனால், தமிழகத்தில் நீங்கள் மட்டும் தான் இதை வலியுறுத்துகிறீர்கள்; உங்கள் சமுதாயத்தில், பிற தலைவர்கள் ஏன் கோருவதில்லை என்ற, 'டவுட்' நாட்டு மக்களுக்கு இருக்கிறது!

பத்திரிகை செய்தி: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 150தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள, 84 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளான, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., மற்றும் இதர கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

'டவுட்' தனபாலு: அ.தி.மு.க., கூட்டணியில் எப்போதும் சிக்கல் இருந்ததே இல்லை. ஜெ., உயிருடன் இருந்த வரை, கூட்டணி உண்டா, இல்லையா என்பது தான், கட்சிகளுக்கு, 'டவுட்'டாக இருக்கும். இப்போது, அனைவரையும் அனுசரித்து செல்லும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., இரட்டையர், கூட்டணி கட்சிகளை தொங்கலில் விடமாட்டார்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதுச்சேரி காங்., முதல்வர் நாராயணசாமி: மத்திய அரசும், கவர்னரும் சேர்ந்து, புதுச்சேரியின் மாநில அதிகாரத்தை குறைத்து வருகின்றனர். புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் வேலையை, பிரதமர் மோடி, கவர்னர் கிரண்பேடி செய்து வருகின்றனர். கவர்னரை புதுச்சேரியை விட்டு வெளியேற்றும்படி, பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

'டவுட்' தனபாலு: புதுச்சேரி கவர்னராக இதுவரை நியமிக்கப்பட்டவர்கள் பலரையும், கண்டும், காணாமல் இருந்த நீங்கள், கிரண் பேடியை மட்டும் கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அவர், பா.ஜ.,வில் இருந்தவர் என்பதாலா அல்லது நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதாலா... நான்காண்டுகளாக உங்கள் சிந்தனை, கவர்னர் எதிர்ப்பிலேயே இருப்பதால், மாநில வளர்ச்சிப் பணிகளை எப்போது தான் பார்ப்பீர்களோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வந்து விட்டது!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்: சில மாதங்களுக்கு முன், இந்திய அளவில், தமிழகத்தில் அதிக நோய் தொற்று பரவியிருந்தது. ஆனால், தற்போது, தமிழகத்தில் தொற்று அளவு முழுதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில், 100 சதவீதம், ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி வாயிலாக, பரிசோதனை செய்யப்படுகிறது.

'டவுட்' தனபாலு: தமிழகத்தில், கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதில், தமிழக சுகாதாரத்துறையினருக்கு பெருமை தான். எனினும், இன்னமும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்களில், மாவட்டங்களில் உள்ள நோய் தொற்றை முழுதும் ஒழிப்பது எந்நாளோ என்பதே, இப்போதைய, 'டவுட்' ஆக உள்ளது. ஏனெனில், எல்லாரும் இன்னும், மூக்கையும், வாயையும் மூடிக்கொண்டே தான் உள்ளோம்!

பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில், முதல்வர் இ.பி.எஸ்., களம் இறங்கி இருக்கும் வேளையில், நடிகர் விஜய் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்கு உள்ளது போல, 'போஸ்டர்கள்' பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இது, திரையுலகில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'டவுட்' தனபாலு: 'கொரோனா ஒழிப்பில் மும்முரமாக இருக்கும் தமிழக முதல்வர், இதுவரை நியாயமாகத் தான் செயல்பட்டார். எப்போது அவரை, நடிகர் விஜய் சந்தித்து பேசினாரோ அப்போது முதல், மாறி விட்டார். அதன் பிறகு தான், சினிமா தியேட்டர்களில், 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தார். இப்போது, நீதிமன்றம் அந்த முடிவை மாற்றி விட்டது' என, தமிழக முழுக்க பேச்சு அடிபடுகிறது. இதன் மூலம், இ.பி.எஸ்., பெயர் கொஞ்சம், ரிப்பேர் ஆகியுள்ளது என்பதில், 'டவுட்டே' இல்லை!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஜன-202106:07:36 IST Report Abuse
D.Ambujavalli விஜய் - முதல்வர் சந்திப்பில் கனமான ‘கவனிப்பு’ இருந்திருக்கும் மக்கள் மூன்று மணி நேரம் ஏசியில் அடைபட்டு தாராளமாக நோய்த் தொற்றுக்கு உதவட்டும் . என் பங்கு கணக்காக வந்தால் போதும் என்ற ‘தாராள’ சிந்தைதான் மீண்டும் தொற்று அதிகரிப்பு, மருத்துவமனைகள் நிரம்பல், டாக்டர், செவிலியர்களை வதை த்தல் எல்லாவற்றுக்கும் அச்சாரம் போட நினைத்தார். மைய அரசு இதைத் தடுத்து காப்பாற்றியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X