பொது செய்தி

தமிழ்நாடு

ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு நடத்த அனுமதி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
வத்தலக்குண்டு : தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் நடத்தப்படும் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வை அடுத்த மாதம் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் சி.ஓ.ஏ.,(ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்பட்டது. தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி, ஆகஸ்டில் நடந்தது.இதனால்

வத்தலக்குண்டு : தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் நடத்தப்படும் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வை அடுத்த மாதம் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் சி.ஓ.ஏ.,(ஆபீஸ் ஆட்டோமேஷன்) தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்பட்டது. தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி, ஆகஸ்டில் நடந்தது.இதனால் தட்டச்சு பயிலகங்களில் சி.ஓ.ஏ.,(ஆபீஸ் ஆட்டோமேஷன்) பயில்வோர் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தட்டச்சு தேர்வின் போதே சி.ஓ.ஏ., தேர்வு நடத்தினால் அனைத்து சான்றிதழ்களையும் ஒரே நேரத்தில் பெறலாம். டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு விண்ணப்பிப்பதிலும் சிக்கல் இருக்காது என மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக தொழில் நுட்ப கல்வி இயக்ககமும் அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அரசு அனுமதி வழங்கி உள்ளதால் ஆபீஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டில் நடத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X