பொது செய்தி

தமிழ்நாடு

முயற்சி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
தாட்கோ டிராக்டர் விற்பனையில் முறைகேடு நடப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு பின்பு டீலர்கள் மற்றும் அதிகாரிகள் சற்று அமைதியாகி, தற்போது மீண்டும் வழக்கம்போல் முறைகேடில் ஈடுபட பயனாளிகளை மூளைச்சலவை செய்ய தொடங்கிவிட்டனர். இடைத்தரகர்களின் பங்கு தாட்கோ மானியத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை மூடிமறைக்கும் வேலைகளை சம்பந்தப்பட்ட

தாட்கோ டிராக்டர் விற்பனையில் முறைகேடு நடப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதற்கு பின்பு டீலர்கள் மற்றும் அதிகாரிகள் சற்று அமைதியாகி, தற்போது மீண்டும் வழக்கம்போல் முறைகேடில் ஈடுபட பயனாளிகளை மூளைச்சலவை செய்ய தொடங்கிவிட்டனர்.

இடைத்தரகர்களின் பங்கு தாட்கோ மானியத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளை மூடிமறைக்கும் வேலைகளை சம்பந்தப்பட்ட துறையினரே துரிதப் படுத்தியுள்ளனர். இத்தகைய பணியில் இடைத்தரகர்களுடன் இணைந்து பணியாற்று கின்றனர். மானியம் ரூ.2.25 லட்சம் பெற்ற நபர்கள் பலர் டிராக்டர்களை விற்றுவிட்டனர். ஆகையால் வாகனத்தை வாங்கியவர்கள், தற்போது பெயர் மாற்றம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும், விண்ணப்பித்த நபர்களிடம் ஏற்கனவே பதிவுக்கட்டணம் எனக்கூறி வசூலித்து விட்டனர்.

தற்போது, வெளியான செய்தியின் அடிப்படையில் மேலோட்டமான விசாரணை நடக்கிறது என்பதால் இது குறித்து எவரும் வெளியே சொல்லக்கூடாது. மீறி கூறினால் மானியம் கிடைக்காது என பயனாளிகளிடம் மூளைச்சலவை செய்து வருகின்றனர்.ஆவணங்கள் மாயமாக வாய்ப்புஇதேபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் டிராக்டர் வாடகை மையம் என்ற திட்டத்தில் வழங்கிய டிராக்டர்களும் விற்கப்பட்டதால் வேளாண் அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். தாட்கோ மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கிய மானியங்கள் பெரும்பாலும் முறைகேடாக சென்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.அரசு நடவடிக்கையை தாமதித்தால் ஆவணங்கள் மாயமாகிவிட வாய்ப்புள்ளது.

ஜி.எஸ்.டி., மற்றும் இதரவரி ஏய்ப்பு, போலியான 4 வகை பில், வங்கி, ஆர்.டி.ஓ., தாட்கோ மற்றும் ஜி.எஸ்.டி., இதனை சரிகட்டும் பணிக்காக இடைத்தரகர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் வழங்கிய பயனாளிகளின் ஆர்.சி., நம்பரை வைத்து தப்போது ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்தாலே பெயர் மாற்றம் செய்த விபரங்களை அறிய முடியும். அரசின் திட்டத்தை சுரண்டும் முறைகேடுகளை தடுத்தால் மட்டுமே உண்மையான விவசாயிகள் பலனடைவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X