பொள்ளாச்சி:திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு நாளை (11ம் தேதி) தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, நான்கு மண்டலங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வினியோகிக்கப்படுகிறது. இரண்டாம் மண்டல பாசனம் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையில் இருந்து, மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, 11ம் தேதி முதல் (நாளை) தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு, உரிய கால இடைவெளி விட்டு, ஐந்து சுற்றுகளாக மொத்தம், 9.5 டி.எம்.சி.,க்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதன் வாயிலாக, மூன்றாம் மண்டலத்தில், 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE