பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களுக்கு சிரமம் தரும் பாதையோர ஆக்கிரமிப்புகள்

Added : ஜன 10, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம் : பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இடையூறாக, ரோட்டோரம் புதிது புதிதாக போடப்படும் கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி தைப்பூசத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக செல்வர். இவர்களை குறி வைத்து சம்பாதிக்க, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து திடீர் கடைகள்

ஒட்டன்சத்திரம் : பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு இடையூறாக, ரோட்டோரம் புதிது புதிதாக போடப்படும் கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழநி தைப்பூசத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக செல்வர். இவர்களை குறி வைத்து சம்பாதிக்க, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து திடீர் கடைகள் முளைத்துள்ளன. பெரும்பாலும் துணிக்கடைகள், ஓட்டல் கடைகளாக உள்ளன.ரோட்டுப் பகுதியில் கடைகளை அமைப்பதால், பக்தர்கள் தாராளமாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கடைகள் விபத்திற்கு வாய்ப்பாகவும் அமைந்து விடுகின்றன.

தற்போது மழை பெய்வதால் பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட்டில் இருந்து குழந்தை வேலப்பர் கோயில் வரை கடையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X