திருத்தணி : தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் இ.பி.எஸ்., நாளை, திருத்தணி வர உள்ளதால், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலுக்காக, முதல்வர் இ.பி.எஸ்., மாவட்டம் தோறும் திறந்த வேனில் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், திருத்தணி நகரில், முதல்வர் இ.பி.எஸ்., நாளை, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.இதனால், அ.தி.மு.க., நிர்வாகிகள், முதல்வர் இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, பழைய சென்னை சாலையில் இடம் தேர்வு செய்து, சாலையோரம் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம், செடி, கொடிகள் அகற்றி, மண் கொட்டி வருகின்றனர்.மேலும், நகர எல்லையில் உள்ள நந்தி ஆற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலத்தின் இருபுறமும் சுண்ணாம்பு அடித்து முதல்வருக்கு வரவேற்பு அளிக்க, சுவர் விளம்பரம் எழுதும் பணியில் மும்முரமாக உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE