இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி

Added : ஜன 10, 2021
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள, கமலா ஹாரிசின் செய்தி தொடர்பு பிரிவு துணை செயலராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், துணை அதிபராக, கமலா ஹாரிஸ் ஆகியோர், வரும், 20ல் பதவியேற்க உள்ளனர். இதையொட்டி, ஜோ பைடன், அரசு பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார். இந்த வகையில், கமலா ஹாரிசின் செய்தி தொடர்பு

வாஷிங்டன் : அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள, கமலா ஹாரிசின் செய்தி தொடர்பு பிரிவு துணை செயலராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக, ஜோ பைடன், துணை அதிபராக, கமலா ஹாரிஸ் ஆகியோர், வரும், 20ல் பதவியேற்க உள்ளனர். இதையொட்டி, ஜோ பைடன், அரசு பொறுப்புகளுக்கு ஆட்களை நியமித்து வருகிறார். இந்த வகையில், கமலா ஹாரிசின் செய்தி தொடர்பு துணை செயலராக, சப்ரினா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரக் குழுவில் செய்திப் பிரிவு செயலராக பணியாற்றியவர். இது குறித்து, ஜோ பைடன் கூறியதாவது:அமெரிக்காவின் மதிப்பை மீண்டும் நிலை நாட்ட, நம் அரசில் மிகச் சிறந்தவர்கள் தேவைப்படுகின்றனர்.

அவர்களை நியமிப்பதில் பெருமை அடைகிறேன். அவர்கள் பதவியேற்ற நாள் முதல், அமெரிக்க மக்களுக்கு இடையறாத சேவை செய்வர்.இவ்வாறு, அவர் கூறினார். சப்ரினா சிங்கின் தாத்தா, சர்தார் சிங் தலைமையிலான, அமெரிக்க இந்தியர்கள் கூட்டமைப்பு, 1940ல் அமெரிக்காவில் நிறப் பாகுபாடுக்கு எதிராக போராட்டம் நடத்தியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், 'லுசி - செல்லர்' சட்டம் மூலம், ஆண்டுக்கு, 100 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் உத்தரவை பிறப்பித்தார். இதற்கிடையே, அமெரிக்காவில், 'லான்டெல் பேசல் என்ற ரசாயன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பவேஷ் படேல், 53. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரை, டல்லாஸ் மத்திய ரிசர்வ் வங்கி, அதன் ஹூஸ்டன் கிளை இயக்குனராக நியமனம் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X