பீஜிங் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்திய மாணவர்களுக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் உருவான, நம் அண்டை நாடான சீனாவில், வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், இதர நாடுகளில், வைரஸ் பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, சீன அரசு எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. இந்நிலையில், சீன பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்களுக்கு, மீண்டும் சீனாவுக்கு திரும்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சீனாவில் இருந்து இந்தியா சென்ற மாணவர்கள், தற்போது மீண்டும் படிப்பை துவங்கவேண்டிய நிலை உள்ளது.
எனினும், இந்தியாவில் வைரஸ் பரவல் முழுதும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால், இந்திய மாணவர்களை, சீனாவுக்குள் அனுமதிக்க, சீன அரசு மறுத்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு, கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பில்லை என்பதால், சீன பல்கலைகளில் பயிலும் மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு, 'ஆன்லைன்' வாயிலாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE